மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது.
இதில் 12 (பி) யுஜிசி விதியின் கீழ் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு நிதியுதவியையும் யுஜிசி வழங்க உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பரிந்துரைகளை அனுப்பலாம். விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
What is function of students skil development center??
ReplyDelete