கட்டபொம்மன் பிறந்த தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2015

கட்டபொம்மன் பிறந்த தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை




பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்கள்.


தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 256-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் அவரது 256-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வீரசக்கதேவி ஆலயக் குழுத் தலைவர் முருகபூபதி தலைமை வகித்தார். அப்போது, ஏராளமானோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில், ஆலயக் குழுச் செயலர் மல்லுச்சாமி, துணைத் தலைவர் முருகேசன், வீராபாண்டிய கட்டபொம்மன் மக்கள் நல இயக்கத் தலைவர் கோபால், வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதேபோல, பல்வேறு அமைப்பினரும், இளைஞர்களும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சிலைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.


கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் உள்ள கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தூத்துக்குடியில்... தூத்துக்குடி சிதம்பரநகர் அருகே கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இளைஞர்கள் சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளையும், ஒயிலாட்ட நிகழ்ச்சியையும் நடத்தினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி