இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால ஸ்ரீசேனா: இன்றே பதவியேற்க உள்ளதாக தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2015

இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால ஸ்ரீசேனா: இன்றே பதவியேற்க உள்ளதாக தகவல்



இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா 3,67,358 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம்மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாக 24,47,167ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

ராஜபக்சேவுக்கு ஆதரவாக 21,07,437 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாககண்டி, காலி, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல கம்பகஹா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் தபால் வாக்குப்பதிவில் மைத்திரிபால சிறிசேன பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை,மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் தபால் வாக்குப் பதிவுகளில் மகிந்த ராஜபக்சமுன்னிலை பெற்றுள்ளார்.முல்லைதீவில் 78.94 % வீத வாக்குகளும், சாவகச்சேரியில் 77,23% வீதவாக்குகளும், காங்கேசன் துறையில் 55.48% வீத வாக்குகளும், கிளிநொச்சியில்72.11% வீத வாக்குகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீசேனா 53.00 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். ராஜபக்சே 45.64 சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

எனவே மைத்திரி பால ஸ்ரீசேனா அதிபராவது உறுதியாகியுள்ளது. இன்றே அவர் பதவியேற்பார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. ஒழுங்கா மிச்சமிருந்த 2 வருஷமும் ஆண்டு விட்டு தேர்தல நடத்தி இருக்கலாமோ? - ராஜபக்சே மைண்ட் வாய்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அங்கே இருக்கும் கோமாளிகள் போதாதென்று இந்திய கோமாளி (சல்மான் கான் ) யை அழைத்து சென்ற போதே ராஜபக்ச க்கு சங்கு சப்தம் கேட்டதே.........

      இனியாவது இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோஷமே ....

      Delete
    2. தான் மீண்டும் போட்டியிட ஏதுவாக சட்டத்தையும் மாற்றி அமைத்த ராஜபக்சே- வையும், ஆசை விட்டுவைகெகவில்லை.

      Delete
  2. Tn idha pola thaan irrikkapoguthu

    ReplyDelete
  3. Ellam oru kuttaila ooruna mattaigalthan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி