பள்ளியில் புதையல்: கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் 59 லட்சம் மதிப்புள்ள 21 தங்க கட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

பள்ளியில் புதையல்: கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் 59 லட்சம் மதிப்புள்ள 21 தங்க கட்டி


பள்ளி லாக்கரில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதபாத் நகரில் ஓஎன்ஜிசி வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது.
பிரதமர் மோடியின் தூய்மை திட்டத்தின்படி, பள்ளியை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பள்ளியின்அனைத்து அறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. பொருட்கள் சேமித்து வைக்கப்படும் அறையில் லாக்கர் வசதி உள்ளது. மொத்தம் 20 லாக்கர் பெட்டிகள் இருந்தன. அந்த இரும்பு லாக்கர் பெட்டிகளை திறந்து பார்த்தபோது 18 இரும்பு பெட்டிகளில் வெறும் குப்பைகள் இருந்தன. இரண்டு லாக்கர்களில் மட்டும் தலா ஒரு துணிப்பை இருந்தது.

அதை திறந்து பார்த்தபோது, ஒரு பையில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. இன்னொன்றில், தங்கக் கட்டிகள் இருந்தன. மொத்தம் ஒரு கோடி ரூபாய் பெறுமான ரொக்கமும், 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 தங்கக் கட்டிகளும் இருந்தன. உடனே போலீசுக்கும் வருமான வரித்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்தனர். ‘இந்த லாக்கர் பெட்டிகள் ஒவ்வொன்றும் தலா ஒரு ஆசிரியருக்கு தரப்படுவதுண்டு. ஓரிரு லாக்கர்களில் மட்டும் பள்ளி தொடர்பான ஆவணங்கள் வைக்கப்படும். பொதுவாக பணம் உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டு விடும். ஆனால் இந்த பணம், தங்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை’ என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். தலைமை ஆசிரியர் அவதேஷ் குமார் கூறுகையில், ‘நான் பொறுப்பேற்று 2 ஆண்டுதான் ஆகிறது. அதற்கு முன்பு வரை இப்படி லாக்கர்கள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. நான் பொறுப்பேற்றதும் அதை திறந்து கூட பார்க்கவில்லை. ஆசிரியர்களுக்கும் ஒதுக்கவில்லை என்றார். ஆசிரியர்களுக்கு லாக்கர்கள் ஒதுக்கப்பட்டாலும், யார் யாருக்கு எந்த காலகட்டத்தில் லாக்கர் ஒதுக்கப்பட்டது என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. எனினும் நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்புக்காக இப்படி பதுக்கப்பட்டிருந்தாக சந்தேகிக்கின்றனர். எனினும் யார் இப்படி பதுக்கினர் என்பது மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி