ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:1 முதல் 9-ஆம் வகுப்பு வரையான பாடத் திட்டம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையிலும், முப்பருவ முறையின் அடிப்படையில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்களுக்கு (தமிழ் நீங்கலாக) ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் புத்தகங்களின் 5 நகல்களை உறுப்பினர்- செயலர், மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் (பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)), கல்லூரி சாலை,சென்னை-6 என்ற முகவரிக்கு வரும் மார்ச 31-க்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பவேண்டும்.பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.அதோடு, பல வண்ணங்களில் ஏ4 அளவுள்ள தாளில் சிடிபி முறையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி