''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என,
மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,''என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் கூறினார்.டில்லியில்நேற்று நடைபெற்ற, லஞ்சத்தை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றஅமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறினார்.மேலும் அவர், ''மத்திய அரசு, இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை, சில மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன; சில, தயக்கம் காட்டியுள்ளன,'' என்றார்.இவர், மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பென்ஷன் துறைகளின் இணையமைச்சராக உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி