குரூப் 1 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2015

குரூப் 1 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு


குரூப் 1 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவிண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு முதல், அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளைமாநகராட்சி நடத்துகிறது.

ஷெனாய் நகர் அம்மா அரங்கம், சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பயிற்சி மையங்கள் அதற்காக செயல் படுகின்றன.கடந்த ஜூலை 20ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டகுரூப் 1 முதல்நிலை தேர்வில், மாநகராட்சி பயிற்சி வகுப்புகளில் படித்த, 45 பேர் கலந்து கொண்டனர். இதில், மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, மாநகராட்சி சார்பில் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று, குரூப் 1முதன்மை தேர்வுக்கு செல்ல உள்ள மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலை தேர்வு எழுதியதற்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன், சென்னை மாநகராட்சி கல்வி துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம். 044-- - 2538 4232,94451 94761 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி