தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2015

தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்என தமிழக ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அழகராஜ் அனைவரையும் வரவேற்று தீர்மானங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மாநில துணை பொதுச்செயலாளர் முனியாண்டி, தலைமை நிலையச் செயலாளர் ஆறுமுகம், மகளிரணி செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள். மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். இதில், நிகழாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பட்டியல் தொகையை மாவட்ட அமைப்பில் செலுத்த வேண்டும். தமிழக ஆசிரியர் கூட்டணி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து இந்தாண்டில் மே-13ம் தேதி புதுதில்லியில் நடத்தும் கல்விக் கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பாக 100 ஆசிரியர்கள் பங்கேற்பது என்றும், இதில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பிப்.15-ம் தேதிக்குள் வட்டார அமைப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு வழங்கும் விலையில்லா பொருள்களை அரசே நேரிடையாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிறைவாக மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி