சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுறித்து காரைக்குடிப் புத்தகத் திருவிழா குழுத் தலைவர் பேராசிரியர் அய்க்கண் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
13-ஆவது ஆண்டு புத்தகத் திரு விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் மக்கள் இந்தப் புத்தகத் திருவிழாவை காண வருகைதந்து புத்தகங்களைக் குறைந்த விலையில் வாங்கிப் பயனடைகின்றனர்.சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து முன்னணி பதிப்பகத்தார் பங்கேற்கின்றனர். சுமார் 50 அரங்குகள் வரை அமைக்கப்படுகின்றன.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகங்களை பார்வையிடலாம்.தினமும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களது படைப்பாற்றல், இலக்கியப்போட்டிகள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு விநாடி-வினா போட்டிகள் நடத்தப்படும்.போட்டிகளில் வெல்வோருக்கு புத்தகங்களை பரிசாக வழங்குகிறோம். கடந்த ஆண்டு இதுபோன்று சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் 2 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.துவக்க விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்குகிறார். இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொடக்கிவைத்துப் பேசுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி புத்தகத்திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி