பிப். 22 இல் வனத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

பிப். 22 இல் வனத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வனவர், கள உதவியாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவு ச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணையத்தின் தலைவர் வி. இருளாண்டி தெரிவித்தார்.

வனவர், களஉதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டல வன பாதுகாவலர்கள் இக்ராம் முகமது ஷா (மதுரை), அருண் (சேலம்), செண்பகமூர்த்தி (திருநெல்வேலி) மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இருளாண்டி செய்தியாளர்களிடம் கூறியது:வனத்துறையில் 148 வனவர், தமிழ்நாடு வனத் தோட்ட கழகத்தில் 17 வனவர், அரசு ரப்பர் தோட்டக் கழகத்தில் 16 கள உதவியாளர்கள் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு இம் மாதம் 22-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வனத்துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ச்ர்ழ்ங்ள்ற்ள்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும்.இதில் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபாலில் நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட மாட்டாது.அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.இருப்பினும் கலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டாலும், நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி