இது குறித்து, மாநில தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதனுடைய முடிவுகள் அன்றைய மாதம் 20-ஆம் தேதி வெளியானது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 21 முதல் 30 வரையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்த நிலையில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், கடந்த 3-ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வின் போது, சில விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை அளிக்கவில்லை. அந்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை அளிக்க வரும் 19-ஆம் தேதி கடைசியாகும். இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு கடிதங்கள் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின் போது, சரியான தகுதி பெறாததால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்கள் முறையீடுகள் ஏதேனும் சமர்ப்பிக்க விரும்பினால் மாநில தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்குத் தெரிவிக்கலாம்.
சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், முறையீடு தெரிவிக்க விரும்புபவர்கள் வரும் 19-ஆம் தேதிக்குள், மாநில ஆள்சேர்ப்பு நிலைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், 170, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரியில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri sir please update website address
ReplyDeleteTRB PG Results announced with in one month. But TNCOOP SRB results announced Jan 2013.
ReplyDelete2 times interview and CV conducted, recently they announced the interview result but still there is a pending for selection. Why they giving chance for 16 days. It may take delay of results.
Is it possible councelling or what plan about SRB ?. still there is no idea from their reply.
Mr. Sri only for u, any news about the selection process.