வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு


தேனி மாவட்டத்தில், கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் 7ஆம்தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள்,வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும், பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும், தங்களது பழைய பதிவு மூப்புடன்வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி