பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் தைக்கும் பணி இன்று தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் தைக்கும் பணி இன்று தொடங்குகிறது


பிளஸ் 2 விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்‘ எனப்படும் முகப்பு சீட்டு இணைத்து தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் இன்று (9ம் தேதி) தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சில ம£வட்டங்களில் செய்முறை தேர்வு 10ம் தேதி தொடங்க உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் பாதுகாப்புடன் இருக்கும் வகையிலும், குளறுபடிகளை தவிர்க்கவும் விடைத்தாள்களின் வடிவங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கு குறுக்கு கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. இப்பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு விடைத்தாள்களை பயன்படுத்த வேண்டும் என்று தனி அட்டவணையே வகுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் ஏற்கனவே தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட வேண்டிய மாணவர்களின் விபரங்கள் அடங்கிய டாப்ஷீட் எனப்படும் முகப்புத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முகப்பு தாள்களை விடைத்தாளுடன் சேர்த்து தைக்கும் பணிகள் அந்தந்த தேர்வு மையங்களில் இன்று தொடங் குகிறது. இதற்காக தனியே டெய்லர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி