பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்பட உள்ளது.
பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத்துறை உட்பட, பல பிரிவுகள் உள்ளன. இவற்றில், 500 உதவி பொறியாளர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்குமேலாக காலியாக இருந்தன. கடந்த ஆண்டு, 202 உதவி பொறியாளர்களை நியமனம் செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., எழுத்து தேர்வை நடத்தியது. இதில் தேர்வானவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இருப்பினும், இன்னும் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், தற்போதுள்ள பொறியாளர்கள், கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பணியிடங்களையும் நிரப்பும் ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறை, தற்போது துவக்கி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித் துறையில், தற்போது காலியாக உள்ள, 300 பணியிடங்களை நிரப்ப தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஓரிரு நாட்களில், டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்படும். இதன்மூலம், பொதுப்பணித் துறையில், காலியாக உள்ள அனைத்து உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்படும். தற்போதுள்ள பொறியாளர்களின் பணிச்சுமையும் குறையும்.இவ்வாறு,அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி