வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பக் கோரி வனக்கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2015

வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பக் கோரி வனக்கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்


வனச்சரகர் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் மாணவர்கள் 20வதுநாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வனவியல் புத்தகங்களை கைகளில் ஏந்தியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஜனவரி 27 ஆம்தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், 20வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவ, மாணவியர், வனத்தைப் பற்றி முழு அறிவு பெற்ற தங்களுக்கு வனத்துறை பணியிடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக புகார் கூறினர். கோரிக்கைகளை ஏற்காவிட்டால், காலவரையரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் மாணவர்கள்எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி