பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2015

பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு


அரசுப் பள்ளியில் மாணவியின் உணவைச் சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் கல்வியைத் தொடர, தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சூனம்பேடு அரசு பள்ளியில் எனது மகன் பிளஸ் 2 படித்து வருகிறான். எனது மகன் உள்பட சக மாணவர்கள் ஐந்து பேர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியின் உணவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்துச் சாப்பிட்டதாக ஆசிரியர் திலகம் என்பவர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

மாணவர்களை கண்டிக்காமல், தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார். பள்ளிக்கு வந்த காவல் ஆய்வாளர் கண்ணன், துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு மாணவர்கள் ஐந்த பேரை அடித்து விசாரித்துள்ளனர்.பிறகு, ஐந்து மாணவர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற போது அவர்களை செல்ல விடாமல் மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பள்ளிக்குச் சென்றால் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டினர். கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால், எனது மகன் உள்பட ஐந்து பேரை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் எம்.ராதாகிருஷ்ணன், பி.புகழேந்தி ஆகியோர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிப்பதற்கு தலைமை ஆசிரியருக்கு மூன்று முறை வாய்ப்பு அளித்தும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, மாணவர்கள் ஐந்து பேரும் மீண்டும் படிப்பைத் தொடர தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

15 comments:

  1. ஒரு தந்தையின் வலி..!தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. டிக்கெட் என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. யோவ் எங்கயாபோகணும்?? பதில் சொல்லு என்று சொல்ல, நடுங்கிக் கொண்டிருந்த அவரின் கைகள் பயணச்சீட்டு எடுக்க முற்பட்டது. நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு காலங்காத்தால வந்துட்டாணுக என் கழுத்தறுக்க என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் நடத்துனர்.ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்கொண்டிருந்தார். அவரோடு வந்திருந்த மற்றொரு நபர் ஆவர்களை இருக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு துயர சம்பவம் அவர் வாழ்வில்நடந்திருக்கிறதுஎன்று தெரிந்தது.நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.ஏன் இப்படி சோகம் சூழ்ந்த படி இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டுஇறங்கினேன்.நான் இறங்கிய அதே பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத்துடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு கிடைத்தது மனம் நிம்மதி அல்ல ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும்.தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழ போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டுகதறி அழுதார்.எதனால் அந்த நபரின் மகன் இறந்தார். என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதி சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில் இறந்து போன தன் மகனை பச்சை ஓலை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று. உயிருக்கு உயிரான தன் மகனை தோளில் சுமந்துகொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு. நடத்துனருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன், மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்.

    ReplyDelete
  2. Pg welfare lstla irukavanga monday trb off vanga

    ReplyDelete
  3. Today cooprative result bublished.

    ReplyDelete
  4. Today cooprative result bublished.

    ReplyDelete
  5. Today cooprative result bublished.

    ReplyDelete
  6. Today cooprative result bublished.

    ReplyDelete
  7. Today cooprative result bublished.

    ReplyDelete
  8. Hai friends .... good evening. After a long gap i am here

    ReplyDelete
  9. Before the end of this month
    Tet paper 2 candidates would get good news
    SAIRAM

    ReplyDelete
    Replies
    1. Ena sir sollurenga ....nallathu nadanthal sari

      Delete
  10. Pavam thanthayin vali irurukum pothum sumanthar irantha pinpum sumanthar athan vali kodumaiyanathu than..

    ReplyDelete
  11. Pavam thanthayin vali irurukum pothum sumanthar irantha pinpum sumanthar athan vali kodumaiyanathu than..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி