மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது.
'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி