அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'

அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறைகேடுகள் மற்றும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, அவ்வப்போது தேர்வாணைய கமிட்டி கூடி, புதிய முடிவுகளை மேற்கொள்ளும்.


இதன்படி, தேர்வாணை யத் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்ரமணியன் தலைமையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த இக்கூட்டத்தில், புதிய தேர்வுகள் அறிவிப்பு, தேர்வு முறைகளில் மாற்றம், விடைத்தாள் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை, இடஒதுக்கீட்டை முறைப்படி பின்பற்றுதல், தேர்வு நடத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள்:

= டி.என்.பி.எஸ்.சி., தேர்வு களின் வெளிப்படைத்தன்மை.

= பணி நியமனங்களில், முறைகேடுகள் இல்லா நிலையை அடைவது எப்படி?

= சிபாரிசுகள், இடைத்தரகர்களின் செயல்பாடு கள், அரசியல்வாதி களின் பரிந்துரை

போன்றவற்றை

தவிர்ப்பது எப்படி? = காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய தேர்வு

களை நடத்துதல், குரூப் - 2, 4 தேர்வு முடிவுகளை விரைந்து

வெளியிடுதல்.-

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி