இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


SSTA வின் அடுத்த வெற்றி!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு எண் WP-4420/2014 .

வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல் செய்ய அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி
தீர்வு வேண்டுமென SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர் மாதம்)வேண்டப்பட்டது.


இந்நிலையில் 28.01.2015 அன்று வழக்கு- கோர்ட்டில் எண் -8 வரிசை எண்-39 ஆக விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மீண்டும் 4 வார கால அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி அவர்கள் அரசுக்கு பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கூறி 8 வாரத்திற்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் என வழக்கை முடித்து வைத்தார்கள். பதில் சாதகமாக இருந்தால் தமிழகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைக்கும் இல்லை எனில் SSTA அதனை எதிர்த்து மீண்டும் தனது போராட்டத்தினை தொடரும் !!! """உச்சநீதிமன்றத்தில் தனித்து நின்று மாவட்ட மாறுதலில் வெற்றி பெற்றது """ போல இதிலும் வெற்றி பெற்று காட்டும்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று தர SSTA அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து போராடி வருகிறது . வழக்கு வெற்றி பெறும் வரையில் SSTA ஓயாது. வெற்றியும் நமதே!!! அனைத்தையும் வெல்வதும் நமதே !!! உண்மையை சொல்வோம்!!!! சொல்வதை செய்வோம் !!!!

5 comments:

  1. உங்களுடைய கடுமையான போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Pg welfare list members coming monday(09/02/2015) come to trb. Ple support. Prasana sir-9943640321 (thiruppur)
    Kalyan sir-7092718257(ramanadapuram)
    Prabakaran-9842891676(kulithalai-karur)

    ReplyDelete
  3. praba sir, please tell about any chance for pg 2nd list(already i finished my cv 17.01.2014) please clear my doubt .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி