சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் திருப்புதல் பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள், வினாத்தாள் திட்ட வரைவுப்படி அமையவில்லை. இதனால் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதனால் மாணவர்கள் தேர்ச்சி நிலை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: வினா எண் 54 ல் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க என்னும் தலைப்பில் இடம் பெறும் வினாக்களுக்கு 4,6,9,10 ஆகியஇயல்களில் இருந்து ஒரு பாடல் கொடுத்து 5 வினாக்கள் கேட்கப்படும் என வினாத்தாள் திட்ட வரைவில் உள்ளது.
ஆனால் இயல் 7-ல் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.அதேபோல் வினா எண் 47 இல் முதல் ஐந்து இயல்களில் இருந்து ஒன்றும் அடுத்த ஐந்து இயல்களில் இருந்து ஒன்றும் என்னும் முறையில் அமைதல் வேண்டும். ஆனால் இத் தேர்வில் இயல் ஒன்றில் இருந்தும், இயல் மூன்றில் இருந்தும் இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ்ப்பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திட்ட வரைவுப்படி வினாத்தாள் அமைய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி