இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2015

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்


இந்த ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துகிறார்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.

சட்டசபை நாளை கூடுகிறது

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.இதற்காக, சட்டசபை கூட்ட அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, தமிழக சட்டசபைக்கு உரையாற்ற வரும் கவர்னரை வரவேற்கும் விதமாக சிவப்புகம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. அதற்கு வசதியாக, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கைக்கு முன்னால் உள்ள மேஜை அகற்றப்பட்டுள்ளது.கவர்னர் உரைசபாநாயகர் இருக்கையில் இருந்தபடி, கவர்னர் கே.ரோசய்யா உரையாற்றுவார் என்பதால், அவருக்கு அருகில் சபாநாயகர் ப.தனபாலுக்கு தனி இருக்கை போடப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்ட அரங்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.தமிழக சட்டசபையில் நாளை காலை 11.15 மணிக்கு கவர்னர் கே.ரோசய்யா உரையாற்ற உள்ளார். அப்போது, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் பேசி முடித்த பிறகு, அந்த உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார்.½ மணி நேரம் தாமதம்ஏற்கனவே, சட்டசபை கூட்டம் காலை 10.45 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ½ மணி நேரம் தாமதமாக காலை 11.15 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு கவர்னர், இந்திய அரசமைப்பு பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை, 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்17-ந் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு பதிலாக, அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டி இருக்கிறார்.இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு கவர்னர், அன்றே காலை 11.15 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டம் கவர்னர் உரையுடன் நிறைவடையும். அதனைத்தொடர்ந்து, அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில்தான், எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது என்று முடிவு செய்யப்படும்.18-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபைக்கு விடுமுறை நாளாகும். அதன் பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். இந்த விவாதம் சுமார் 4 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளில், தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். அன்றோடு கவர்னர் உரைக்கான சட்டசபை கூட்டம் முடிவடையும்.

பட்ஜெட் தாக்கல்

அடுத்த சில நாட்களில், பட்ஜெட் தாக்கல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.அந்த தேதியில், 2015-2016-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி இலாகாவை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவார்கள். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். அதன் பின்னர், ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள். அதன் மீது விவாதம் நடந்த பிறகு, அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் என்று தெரிகிறது.கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது, இடையே பாராளுமன்ற தேர்தல் வந்ததால், மானிய கோரிக்கை மீதான விவாதம் தேர்தலுக்கு பிறகே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.R

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி