ஆசிரியர்களுக்கு மரம் வளர்ப்பு,இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

ஆசிரியர்களுக்கு மரம் வளர்ப்பு,இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி


அரூரில் ஆசிரியர்களுக்கு மரம் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.அரூர், மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 114 ஆசிரியர்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி வளாகங்களில் மரம் வளர்த்தல், மண்புழு, இயற்கை உரம்தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தருமபுரி மாவட்ட நவீன நாற்றங்கால் மையங்களின் கோட்ட வன அலுவலர் ஏ.அன்பு, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஏ.கிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். இதில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி