தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பத்தில் ஏற்பட்டதவறுக்கு மனுதாரரே பொறுப்பாவார் என்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பொறியியல் பட்டதாரியான வி. பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு விவரம்: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2-ஏ பணிக்கான தேர்வுக்காக ஆன்-லைனில் விண்ணப்பித்தேன். அதில், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு உண்டா என்பதற்கு, ஆம் எனத் தவறுதலாக பதிலளித்துவிட்டேன்.தேர்வில் தேர்ச்சி பெற்று ஆவணங்களை சரிபார்க்க அழைக்கப்பட்டேன். ஆனால், விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி, என்னை கலந்தாய்வில் அனுமதிக்கஅதிகாரிகள் மறுத்துவிட்டனர். விண்ணப்பிக்கும்போது இயல்பாகத் தவறு நேர்ந்துள்ளது. எனவே, எனக்குப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு மனுவைத் தள்ளுபடி செய்தார்.மனுதாரர் பொய்யான தகவல் அளித்து விலக்கு கோரியதை ஏற்க முடியாது.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது ஏற்படும் தவறுக்கு மனுதாரரே பொறுப்பாவார் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்குடிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி