விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கு அதிக செலவு: பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கு அதிக செலவு: பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள்


ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை போன்ற புதிய விளையாட்டுகளுக்கு, உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கு அதிகம் செலவாவதால், திறமையான ஏழை மாணவர்களால் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது.பள்ளிக் கல்வித்துறை நடத்தும் தடகள மற்றும் பழைய விளையாட்டுகளுக்கு கருவிகள் தேவையில்லை.
வாள்சண்டை பயிற்சிக்கு தேவையான முகக்கவசம், உடல் கவசம், வாள், மற்ற உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.ஜிம்னாஸ்டிக்கில் ரிதமிக் பிரிவிற்கான ஆடையின் விலை ரூ.20 ஆயிரம், விளையாட்டு போட்டிக்கான ஆடைக்கும் அதிகம் செலவாகிறது. ஜூடோ போட்டிக்கான முகக்கவசமும் சில ஆயிரங்களைத் தொடுகிறது.போல்வால்ட்டில் பைபர் போலுக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேலாகிறது. வளையும் தன்மை கொண்ட இந்த போல் மூலம், எளிதாக வெற்றியைத் தொடலாம்.டேக்வாண்டோ, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கு தரைவிரிப்பு மெத்தைகள் தேவை. இந்த வசதிகள் எதுவுமே பள்ளிக்கல்வி துறை செய்து தரவில்லை. வாள்சண்டை, ஜூடோ போட்டியில் பங்கேற்கும் ஆர்வமிருந்தும் ஏழை மாணவர்கள் பங்கேற்பதில்லை. வாடகைக்கு வாங்கினாலும் விலை கட்டுப்படியாகாது.மதுரையில் சமீபத்தில் நடந்த மாநில போட்டிகளில், மெத்தைகள் இன்றி பிற மாவட்டங்களில் வண்டி வாடகைக்கு செலவு செய்து மெத்தைகளை வாங்கி போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளிக்கல்வித் துறை சார்பில், உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் மூலம், போட்டிகளுக்கு தேவையான அளவில் வீரர்களுக்கான உடை, கருவிகள், போட்டிக்கான மெத்தைகளை வாங்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி