மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ரெயில் மற்றும் விமான நிலையங்களில் புத்தகக் கடைகள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்ம்ருதி இரானி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், நாடு முழுவதும் அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் (என்பிடி) புத்தகக் கடைகளை திறப்பது குறித்து ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்துத் துறையை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அணுகும் என தெரிவித்தார்.
மேலும் அந்தக் கடைகளில் அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக விழாவில் பேசியஎழுத்தாளர் நரேந்திர கோலி, “ஒரு பக்கம் வாசகர்கள் குறைந்து விட்டதாக பதிப்பாளர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் புத்தகங்கள் எளிதாக கிடைக்கவில்லை என்று வாசகர்கள் குறை கூறுகிறார்கள். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க நாடு முழுவதிலும் உள்ள ரெயில்வே மற்றும் விமான நிலைய உள் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி