சத்துணவு செலவின தொகை வழங்க தாமதம்:கடன் வாங்கி சப்ளை செய்யும் அமைப்பாளர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2015

சத்துணவு செலவின தொகை வழங்க தாமதம்:கடன் வாங்கி சப்ளை செய்யும் அமைப்பாளர்கள்

நாமக்கல்:தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையம், பள்ளிகள் ஆகியவை மூலமாக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சத்துணவில், காலத்துக்கேற்ப மாற்றத்தைக் கொண்டு வர, கடந்த, 2012 முதல் படிப்படியாக, புதிய வகையில், கலவை சாதம் திட்டம் அறிமுகப்படுத்தி, நடைமுறையில் உள்ளது.



நாள் வாரியாக...:அதில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, நாள் வாரியாக, தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், கலவை சாதம் மற்றும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அவித்த மற்றும் மசாலா முட்டை வழங்கப்படும்.பள்ளிகளில், நாள் வாரியாக, பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம், தக்காளி சாதம், பெப்பர், மசாலா, பருப்பு, பொரியல் ஆகிய வழங்கப்படும்.

சத்துணவு தயாரிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து அரிசியும், முட்டை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், விறகு ஆகியன, வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம்.இதில், குழந்தைகளின் உணவூட்டு செலவு மானியத் தொகையாக, ஐந்தாம் வகுப்பு வரை, தலா ஒரு மாணவருக்கு, சாம்பார் சாதம், 1.30 காசும், கலவை சாதம், 1.70 காசும் வழங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, சாம்பார் சாதத்திற்கு, 1.40 காசும், கலவை சாதத்திற்கு, 1.80 காசு என, கணக்கிட்டு வழங்கப்படுகிறது.கடந்த, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே, மேற்கண்ட திட்டத்தின்படி, நிதி ஒதுக்கீடு செய்து, உணவூட்டு மானியம் வழங்கப்பட்டது.

நெருக்கடி:அதன்பின், கடந்த, அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய நான்கு மாதங்களுக்கும், உணவூட்டு மானிய செலவு தொகை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படவில்லை.அங்கன்வாடி மையம், சத்துணவு அமைப்பாளர்கள், அவரவர் சொந்த செலவிலும், கடன் வாங்கியும், 5,000 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை, கடந்த நான்கு மாதத்தில் செலவு செய்துள்ளனர். மாநில சத்துணவு திட்டத்துறையில் இருந்து, சத்துணவுக்கான உணவூட்டு மானிய தொகை ஒதுக்கீடு செய்யாததால், சத்துணவு அமைப்பாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி