சி.பி.எஸ்., திட்டத்தைரத்து செய்ய; ஆசிரியர்கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

சி.பி.எஸ்., திட்டத்தைரத்து செய்ய; ஆசிரியர்கூட்டமைப்பு வலியுறுத்தல்


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்வதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, ஈரோடு ஒன்றிய செயலாளர் தேவராஜ் வரவேற்றார். தலைவர் லியோ தலைமை வகித்தார். இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்வது. 2004-06 வரையிலான தொகுப்பூதிய காலத்தை, பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் மற்றும் அலகு விட்டு, அலகு மாறிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.ஆர்.பி., தரஎண் அடிப்படையில், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி