பேஸ்புக் இலவச நெட் வசதி எதிரொலி: கட்டணங்களை குறைக்க செல்போன் நிறுவனங்கள் திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

பேஸ்புக் இலவச நெட் வசதி எதிரொலி: கட்டணங்களை குறைக்க செல்போன் நிறுவனங்கள் திட்டம்


பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன்இணைந்து இலவசமாக இணைய தள வசதியை வழங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது.
இந்த வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் முதல் கட்டமாக 33 இணைய தளங்களை இலவசமாக பெறமுடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், இந்த சேவையினால் வரக்கூடிய தொழில்போட்டியை சமாளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இணைய தள சேவையை வழங்கி வரும் தொலைபேசி நிறுவனங்கள் இணையதளத்திற்கான டேட்டா கட்டணத்தை குறைக்க கூடும் என்றும், குறிப்பிட்ட சில இணையதளங்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து வரும் கேபிஎம்ஜி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி