ஐ.ஐ.டி., மாணவர்களை தேர்வு செய்ய வங்கிகளுக்கு அனுமதி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2015

ஐ.ஐ.டி., மாணவர்களை தேர்வு செய்ய வங்கிகளுக்கு அனுமதி?

இந்திய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.,), இந்திய மேலாண்மை மையம் (ஐ.ஐ.எம்.,) ஆகியவற்றின் மாணவர்களை பணிக்கு தேர்வு செய்ய, பொதுத் துறை வங்கிகளை அனுமதிக்க வேண்டும் என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:பொதுத் துறை வங்கிகள் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் வளாக தேர்வு நடத்தி மாணவர்களை பணிக்கு தேர்வு செய்ய, சுப்ரீம் கோர்ட் அண்மையில் தடை விதித்துள்ளது. காலியிடங்களுக்கு விளம்பரம் வாயிலாகவே தேர்வு நடத்த வேண்டும் என, தெரிவித்துள்ளது.


ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., களை உருவாக்க பெருமளவு அரசு பணம் செலவிடப்படுகிறது. இந்த மையங்களில் இருந்து தலைசிறந்த மாணவர்கள் வெளிவருகின்றனர். அத்தகையோர், வங்கிகளின் வளர்ச்சிக்கு துணை புரிவர். குடிமக்களின் வரிப் பணத்தில் அமைக்கப்படும் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., அமைப்புகளில் இருந்து வெளிவரும் திறமையானவர்களை, அரசு வங்கிகள் தேர்வு செய்யக்கூடாது என்று கூறும் நம்நாடு குறித்து, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இதனால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் அதிக வேறுபாடு காணப்படுகிறது. இத்தகைய சூழலிலும், பொதுத் துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மாணவர்களை தேர்வு செய்ய அனுமதித்தால், தற்போதுள்ளதை விட, பொதுத் துறை வங்கிகள் மேலும் சிறப்பாக செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி