விமான எரிபொருள் விலை குறைப்பு பெட்ரோல், டீசலை விட குறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2015

விமான எரிபொருள் விலை குறைப்பு பெட்ரோல், டீசலை விட குறைவு

எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை, கிலோ லிட்டருக்கு, 11.27 சதவீதம் (ரூ.5,909.90) குறைத்து, 46,513.02 ரூபாயாக நிர்ணயித்துள்ளன.


இதனால், கடந்த மாதம், பெட்ரோல் விலையை விட குறைவாக இருந்த விமான எரிபொருள், தற்போது, டீசல் விலையை விட குறைந்துள்ளது. விமானங்களுக்கு உயர்ரக, துாய்மையான பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக, வாகனங்களுக்கு பயன்படும் பெட்ரோலை விட, விமான எரிபொருள் உற்பத்திக்கான செலவு அதிகம். இந்நிலையில், விமான எரிபொருள் விலையை விட,பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருப்பதற்கு, அவற்றுக்கு உயர்த்தப்பட்ட உற்பத்தி வரி தான் காரணம். கடந்தாண்டு நவம்பர் முதல், நான்கு முறை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, லிட்டருக்கு முறையே, 7.75 ரூபாய் மற்றும் 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


அதே சமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு முறையே, 14.68 ரூபாய் மற்றும் 10.71 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்த்தப்படாமல் இருந்தால், பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு முறையே, 22.43 ரூபாய் மற்றும் 18.21 ரூபாய் குறைந்திருக்க வேண்டும். வழக்கமாக, எண்ணெய் நிறுவனங்கள், பிரதி மாதம் 1,15 தேதிகளில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும். கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், இம்மாதம் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில், விமான எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பு வந்துள்ளது. இதன் பின்னணியில், பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர்களின் போராட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி