ஒரு வருடத்துக்கு இலவச இணைய இணைப்பு வசதியுடன் ஆகாஷ் ஸ்மார்ட் போன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2015

ஒரு வருடத்துக்கு இலவச இணைய இணைப்பு வசதியுடன் ஆகாஷ் ஸ்மார்ட் போன்


குறைந்த விலையிலான ஆகாஷ் டேப்லட்டை உருவாக்கிய டேட்ட விண்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை
ரூ.3,000 என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைவிட முக்கியமான விஷயம் ஒரு வருடத்துக்கு இலவச இணைய இணைப்பு வசதியுடன் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதற்காக செல்போன் சேவை நிறுவனங்களுடன் பேசி வருவதாக நிறுவன சி.இ.ஒ சுனிதா சிங் துலி கூறியுள்ளார்.எங்குப் பார்த்தாலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பது போல் தோன்றினாலும் இந்தியாவில்செல்போன் வாங்க வருபர்களில் 76 சதவீதம் பேர் ரூ.4,000 விலையிலான போன்களையே வாங்குவதாகவும் ,60 சதவீதம் பேர் ரூ.2,000 விலையிலான போன்களை வாங்குவதாகவும் செல்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில்பெரும்பாலானோர் இணைய வசதியைப் பயன்படுத்துவதில்லை.

இதை மாற்றும் வகையில்தான் ஓராண்டு இலவச இணைய வசதியுடன் ஸ்மார்ட் போனைக் கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

2 comments:

  1. இந்த ஸ்மார்ட் போனை எங்கு வாங்கலாம்? யார் வேண்டுமானாலும் வாங்கலாமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி