வீட்டு கழிப்பறையை 'படம்' பிடித்து அனுப்ப உத்தரவு:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2015

வீட்டு கழிப்பறையை 'படம்' பிடித்து அனுப்ப உத்தரவு:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி


தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து ஆதாரத்துடன் சான்றளிக்க அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆசிரியர் அல்லது அரசு ஊழியர்கள் போட்டோ, வீட்டு கழிப்பறை போட்டோ, முகவரி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்களுடன், 'எனது வீட்டில் கழிப்பறை வசதி உள்ளது. அதை அனைவரும் பயன்படுத்துகிறோம்' என்ற கையெழுத்திட்ட உறுதிமொழி படிவத்துடன், கழிப்பறை போட்டோவையும் இணைத்து அந்தந்த துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன், மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது:சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த உத்தரவில் கழிப்பறையை போட்டோ ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிபந்தனையை வாபஸ் பெற வேண்டும்.'மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பல அரசு பள்ளிகளில் அந்த வசதி இல்லை. கழிப்பறைஇருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றனர்.

6 comments:

  1. Vijayakumar sir tet case supreme court la eppa varum details sollunga pls

    ReplyDelete
    Replies
    1. tet case march month endukkul oru nilai therium.... athatkul 90 above edutha anaivarukkum posting poda theevira aalosanai nadanthuvaruvatha thagaval......

      Delete
    2. atleast case pottavangalukkavathu posting confirm february endukkul poduvaanga....

      Delete
    3. Ravi sir unga first comment padi nadandha ellarkkum santhosam anyway tkank u so much sir.

      Delete
  2. Replies
    1. nagaraj and chinnasamy and other above 90 friends tet case supreme courtil march 26 varugirathu.... dont worry... supreme court case listil namathu case list date update aaituchu......

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி