வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
2009, அக். 1 முதல் டிச. 31 வரையான காலாண்டில் பதிவு செய்து, தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்த பட்டப் படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்எஸ்எல்சி மற்றும் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் நிகழ் காலாண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பப் படிவங்களை நிறைவு செய்து, உரிய ஆவணங்களுடன் திருவள் ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகைக்கான விண்ணப் பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலி ருந்து ஓராண்டு கழித்து, 2 மற்றும் 3 ஆண்டுகளின் தொடக்கத்தில் ‘பணியில் இல்லை’ என்ற சுய உறுதி மொழிப் படிவத்தை அளிக்க வேண் டும். இதோடு, புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக் கத் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பிக்கும் விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறுவோ ருக்கும் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி