கல்வித்துறையின் அறிவிப்புக்கு, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித்துறை சார்பில், 65 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் சம்மந்தமாக, கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.
இதில், புதுச்சேரியில் எந்த கல்லுாரியிலும் இல்லாத பாடங்களை கல்வித் தகுதியாக கேட்டிருந்தனர். இதுகுறித்து சங்கத்தின் சார்பில்,முதல்வர், கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு மனு கொடுத்தோம்.தற்போது, கல்வித்துறை சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ரஷ்த்ரியா திட்ட பணிக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம், ஏற்கனவே தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழைய முறையில் படித்த இளநிலைப் பட்டம் பெற்றவர்களும், புதிய முறையில், குறிப்பாக செயல்பாட்டு வழியில் பயின்று முடித்த மாணவர்களும் பயன்பெறுமாறு திருத்தி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி