விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2015

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை


பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:

* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* எஸ்எஸ்எல்சி மொழி பாட தேர்வர்களுக்கு வழங்கப்படும் 22 பக்கங்கள் கொண்ட விடைத்தாளிலுள்ள முதல் 2 பக்கங்கள் ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். எனவே, தமிழ் முதல் தாள் மற்றும் ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகளின்போது அவ்விரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் .
* எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கு வழங்கப்படும் எஸ்எஸ்எல்சி மொழி பாட முதன்மை தாளிலுள்ள கோடிடப்படாத முதல் 2 பக்கங்களை விளம்பரம் தொடர்பான வினாவிற்கு விடையளிக்க பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.
* தேர்வு எழுதும்போது ரப் வொர்க் செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும், விடைத்தாளின் வலது பக்க ஓரப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது பக்க ஓரப்பகுதி மதிப்பெண்களை குறிப்படுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது.
* விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவால் எழுதவேண்டும். மேலும் பயன்படுத்தாத பக்கங்கள் தேர்வரே தமது கைப்பட பேனாவால் கோடிட்டு அடித்து, “பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கபட்டது’ என எழுதவேண்டும். ஆனால், தேர்வரது/ அறைக்கண்காணிப்பாளராவது கையொப்பம் இடக்கூடாது. மேலும் தேர்வரது பதிவெண்ணோ, பெயரோ எழுதக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும்.
* கூடுதல் விடைத்தாள்கள் வேண்டுமென்றால், கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி