செய்முறை தேர்வில் முழு மார்க் பெற ஆசிரியர்களுக்கு விருந்து: தேர்வில் சாதிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

செய்முறை தேர்வில் முழு மார்க் பெற ஆசிரியர்களுக்கு விருந்து: தேர்வில் சாதிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு


பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்கும்ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் சார்பில், 'தடபுடல்' விருந்து நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு முன், செய்முறைத் தேர்வு நடக்கும்.
தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு நடக்கிறது.இயற்பியல், வேதியி யல், உயிரியல், தாவர வியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்ட வற்றுக்கு, வரும், 24ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்கும்படி தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் விவரம்:

பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள, 200 மதிப்பெண்ணில், 150 மதிப்பெண் எழுத்துத் தேர்வாகவும், 50 மதிப்பெண் செய்முறைத் தேர்வாகவும் இருக்கும். அதில், செய்முறைத் தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 30 மதிப்பெண் புற மதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.அக மற்றும் புற மதிப்பீடு மதிப்பெண் சேர்த்து, 50க்கு, 40 மதிப்பெண் எடுத்தால் தான், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களா கவும்; குறைவாக எடுப்பவர்கள், தேர்ச்சி பெறாதவர்களாகவும் அறிவிக்கப்படுவர்.அதேபோல், 150 மதிப்பெண்ணுக்கான எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண் பெற வேண்டியது கட்டாயம்.

செய்முறையின் மகத்துவம்:

மாணவர், செய்முறைத் தேர்வில், 40 மதிப்பெண் எடுக்காமல், எழுத்துத் தேர்வில், 150க்கு, 150 மதிப்பெண் பெற்றாலும், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேர்ச்சியற்றவராக அறிவிக்கப்படுவார். அதனால், செய்முறைத் தேர்வு முக்கியமாக இருக்கிறது.அதனால், எழுத்துத் தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 30 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில், 40 மதிப்பெண்ணும் எடுத்துவிட்டால், தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண் பெற்று விடலாம்.

திணறும் மாணவர்கள்:

பெரும்பாலான மாணவர்கள், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண்ணான, 30ஐ பெற்று விடுவர்; ஆனால், செய்முறைத் தேர்வில், 40 மதிப்பெண் பெறத் திணறுவர். செய்முறைத் தேர்வு மதிப்பெண், மாணவரின் நன்னடத்தை, வருகைப் பதிவு, செய்முறைத் தேர்வு பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.இதில், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்க, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளின் உத்தரவின்படி, அருகில் உள்ள பள்ளி ஆசிரியர், புறமதிப்பீடு ஆசிரியராக நியமிக்கப்படுவார். அக மதிப்பீடு மதிப்பெண்ணை, அந்தந்தபள்ளி பாட ஆசிரியரே வழங்கி விடுவர். இந்த மதிப்பெண், சுளையாக, மாணவர்களுக்கு கிடைத்துவிடும்.

தடபுடல் கவனிப்பு:

ஆனால், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் ஆசிரியர், 'முரண்டு' பிடித்தால், அதற்கான முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும். பெரும்பாலும், புற மதிப்பீடு ஆசிரியராக வருபவருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியருக்கும், 'லடாய்' இருந்தாலோ, அல்லது, பள்ளி நிர்வாகத்துடன் முட்டல், மோதல் இருந்தாலோ,அந்த கோபத்தை, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணில் காட்டுவர்.பதார்த்தங்கள்:இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவில், எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் நாமக்கல் மாவட்டத்தில், புற மதிப்பீடு ஆசிரியர்களுக்கு, ஏகபோக கவனிப்பும், தடபுடல் விருந்தும் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ப.வேலுார் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்த செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியருக்கு விருந்து நடந்தது. இதற்காக, மாணவியரே, அருகில் உள்ள கடையில் இருந்து, உணவு பதார்த்தங்களை வாங்கிச் சென்றனர். இதற்காக, மாணவ, மாணவியரிடம் குறிப்பிட்ட தொகை, 'வசூல்' செய்யப்பட்டதாக குற்றச்சாட்டும் உள்ளது.

முறைகேட்டை உறுதிபடுத்துகிறதா?

ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், நாமக்கல் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துவிடுகிறது. மாநிலம் முழுவதும், பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், சில லட்சம் ரூபாய் கொடுத்து படிக்கின்றனர்.எனினும், தேர்வின்போது, முறைகேடுகள் நடப்பதாக, பல ஆண்டுகளாகவே புகார் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், செய்முறைத்தேர்வு விவகாரம் அமைந்துள்ளது. 'இதேபோல், எழுத்துத் தேர்விலும், ஆசிரியர்களுக்கு, 'கவனிப்பு' நடந்தால், தேர்வு முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது' என, சுற்று வட்டார மாவட்ட மாணவ, மாணவியர் கருத்துதெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. Athenapa arasu palliyai mattum koorukireergal.

    ReplyDelete
  2. Athavida koduma ithenamo NAMAKKAL dist la matum than nadakra mathure poturukengale OTHER dist in TAMIL NADU la iruka PRIVATE school adress lam theriathungala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி