உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பிய துணைப் பாடத்தை தேர்வு செய்யும் சி.பி.சி.எஸ். முறையை அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும் என குடியசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்தரங்கை டெல்லியில் தொடங்கி வைத்துப் பேசிய அவர், இந்திய உயர் கல்வி அமைப்புகளில் இருந்து வெளிவரும் மாணவர்கள், உலகின் மிகச் சிறந்த மாணவர்களுடன் போட்டியிட வேண்டியிருப்பதாக தெரிவித்தார். மாணவர்களிடம் அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பிய துணைப் பாடத்தைத் தேர்வு செய்யும்முறையை ஏற்கனவே 23 மத்திய பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மற்ற மத்திய பல்கலைக்கழகங்களும் இந்த முறையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி