அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை பயனுள்ளதாக மாற்றவேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை பயனுள்ளதாக மாற்றவேண்டும்


அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ள வகுப்பறைகளை பயனுள்ள வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
காலியாக உள்ள வகுப்பறைகள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் பலவற்றில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக வகுப்பறைகள் உள்ளன. இவ்வாறு பயன்பாடின்றி உள்ள வகுப்பறைகள் முறையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படாததால் அங்கு கொசுக்கள், பூச்சிகள் உருவாகி வருகின்றன. இதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவி மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு உருவாகும் அபாயம் ஏற்படுகிறது.சில பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால் பயன்பாடின்றி உள்ள அறைகளை வெளிநபர்கள் சமூக விரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் பயன்பாடின்றி கூடுதலாக உள்ள வகுப்பறைகளை பயனுள்ள வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

எச்சரிக்கை பலகைகள்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை மாணவர்களின் கற்றல் திறன் மற்றும்பிற திறன்களையும் மேம்படுத்தும் வகையில் நூலக அறை, காணொலி காட்சிஅறை, அறிவியல் ஆய்வக அறை, முதலுதவி அறை, யோகா, தியானம் செய்வதற்கான அறை, மொழிஆய்வகம், என தேவைக்கு ஏற்ப மாற்றி பயனுள்ள வகையில் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களைஉடனடியாக இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட துறைக்கு கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த பள்ளி கட்டிட அறைகள் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகைகளை வைத்து மாணவ–மாணவிகள், அவற்றின் அருகே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமீப காலமாக மாணவர்கள் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட சுகாதாரமின்மையே முக்கிய காரணம் ஆகும். அதனால் பள்ளியின்சுற்றுப்புறம், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தின் அனைத்து பகுதிகளையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

சத்துணவில் சுகாதாரம்

சத்துணவு வழங்கப்படும் இடம் தூய்மையாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். சத்துணவை சுகாதாரமாக சமைத்து வழங்கவும், முட்டைகளை ஆய்வு செய்த பிறகே மாணவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் உடல் நலக்குறைபாட்டால் பள்ளிக்கு வருகை தராமல் உள்ள மாணவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரிலும், சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்க வேண்டும்.தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தினசரி பள்ளியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆரோக்கியமான மனித வளத்தின் மூலமே வளர்ச்சி சாத்தியப்படும். அதற்கு அடிப்படையான மாணவர்களின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவற்றை தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி