விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு.


பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது.
இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.வரலாறு பாட விடைத்தாளில், 36 மற்றும் 37 பக்கத்தில் வரைப்படங்கள் வைத்து தைத்தல், வணிகக்கணித பாடத்திற்கு 36, 37 ம் பக்கத்தில், கிராப் ஷீட் வைத்துதைக்கப்பட வேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாளில், 22 பக்கங்களில் முதல் இரண்டு பக்கங்கள் கோடிடப்படாத பக்கங்களாக உள்ளன. கோடிடப்படாத பக்கங்கள் கொண்ட விடைத்தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விற்கு பயன்படுத்த வேண்டும்.இத்தேர்வின்போது, விளம்பர வினா - விடை பகுதிக்கு, அந்த கோடிடப்படாத பக்கங்களை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஆங்கிலம் முதல் தாள் மற்றும் தமிழ் மொழிப்பாட தேர்வின் போது அப்பக்கங்களை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தேர்விற்கென நிர்ணயிக்கப்பட்ட வகையைச் சார்ந்த, முதன்மை விடைத்தாளுடன் மட்டுமே அப்பாடத்திற்கான முகப்புத்தாள் வைத்து தைத்தல் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

9 comments:

 1. நடப்பு கல்வி ஆண்டில் 2000 அரசு பள்ளிகள் மூடும் நிலை.
  8000 ஆசிரியர் பணியிடம் பறிபோகும் அபாயம்.
  4000 சத்துணவு ஊழியர் பணியிழக்கும் அவல நிலை.
  காப்பாற்றுவது யார்?

  பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைவு என காரணம் கற்பிக்கும் அரசு

  சரி செய்யுமா?

  இல்லை,மீண்டும் ஒரு நீதி மன்ற யுத்தமா?

  அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க இது ஒரு மறைமுக

  யுக்தியா?

  இந்த நிலையை மாற்றி தற்போது மூட இருக்கும் 2000 பள்ளிகள் மட்டும்

  அல்ல...

  கடந்த கல்வி ஆண்டில் மூடப்பட்ட 1500 அரசு பள்ளிகளையும் மீண்டும்

  திறக்க வைப்பது எப்படி?

  உங்கள் ஆலோசனையை பதிவிடுங்கள் நண்பர்களே...

  அரசாங்கத்தை நம்பி நம்பி நம் வாழ்க்கையை தொலைத்தது போதும்...

  மீண்டும் ஒரு கல்வி புரட்சி தொடங்கும் நேரம் இது...

  தொடங்கி நடத்த போவது இறைவனுக்கும் மேலான நம் ஆசிரியர்

  இனமே...

  புரியவில்லையா?

  மாதா

  பிதா

  குரு

  தெய்வம் ...

  தொடங்க வேண்டிய தருணம் மிக அருகில்...

  கருத்துகளை உடனே பதிவிடுங்கள் தோழர்களே...

  வருங்கால தலைமுறையின் வளமைக்காக...

  கல்வியின் வளர்ச்சிக்காக...

  ReplyDelete
 2. 5. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR G.A.,TAKES NOTICE
  (Service) A. MOHAN FOR RR1 TO 3
  (COUNTER FILED)
  M/S.T.LAJAPATHIROY
  S.RAJASEKAR
  FOR R4 TO R27
  To Dispense With
  MP(MD).1/2014 - DO -
  For Stay
  MP(MD).2/2014 - DO -
  For Direction
  MP(MD).3/2014 - DO -
  To vacate stay
  MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
  and
  WP(MD).17255/2014 H.ARUMUGAM M/S.M.O.THEVANKUMAR
  (Service) M/S.K.ESAKKI M/S. M.THIRUNAVUKHARASU
  FOR R3 TO R18
  M.SARAVANAN
  FOR R19 TO R22
  To Dispense With
  MP(MD).1/2014 - DO -
  For Stay
  MP(MD).2/2014 - DO -
  For Direction
  MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM
  To vacate stay
  MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
  To vacate stay
  MP(MD).6/2014 M/S.R.VENKATESAN
  To Implead
  MP(MD).1/2015 M/S.R.SUBRAMANIAN
  M.SARAVANAN
  and To vacate stay
  MP(MD).2/2015 M/S.M.O.THEVAN KUMAR
  and To vacate stay
  MP(MD).3/2015 M/S.R.SUBRAMANI

  ReplyDelete
 3. இந்த பதிவின் முழு தகவலை பதிவிட்டால் மிக உதவியாக இருக்கும் திரு.செந்தில் அவர்களே....

  ReplyDelete
 4. ஆனால் வழக்கு 25.02.2015(புதன் கிழமை) ஒத்திவைத்ததாக தகவல்..

  ReplyDelete
 5. Sir namathu nilamai kathu kathy ippadiye poi kondirukirathu eppo than antha neram varumo?

  ReplyDelete
 6. That means in paper ii they have to attend question no. 12 in that two unruled paper. Am i right sir

  ReplyDelete
 7. Vijaya kumar sir pg trb 2015 second list chance irukka when sir please reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி