TNTET:ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

TNTET:ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு


கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாதநிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.

நியமனம்:

இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர். இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது. இதற்காக தரம்பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ளகுறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, ஒரு வழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆர்வம்:

கடந்த இரண்டு ஆண்டில் நடந்த, மூன்று ஆசிரியர் தேர்விலும், அரசு பணியிடங்கள்நிரப்பப்பட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினால், அரசு பணி நியமனம் வழங்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கையால், தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையே உபரியாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பணிநியமனம் என்பது,இப்போதைக்கு தேவைப்படாது என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது குறித்தும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பணிநியமனம் இல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்:

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசும் சரி, பொதுமக்களும் சரி, ஆசிரியர் தகுதித்தேர்வை, அரசு பள்ளிகளில் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வாகவே கருதுகின்றனர். உண்மையில், தனியார் பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் என, அனைத்திலும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் போது,அரசு பணியை மட்டும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல், தள்ளி வைத்துக்கொண்டே வருவது, பலரின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, நிர்வாகம் அனுமதித்தாலும், சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர் என்பதற்கான அளவுகோலாக, ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி, உடனடியாக அதை நடத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

42 comments:

  1. அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலைவணக்கம்.
    ஆதிதிராவிட கள்ளர் நல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு இறுதிகட்டத்தில் உள்ளது. அரசின் அட்வகேட் ஜெனரல் 9.2.15 மற்றும் 10.2.15 ஆகிய இரு தேதிகளில் ஒன்றில் ஆஜராவதாக ஆதிகார பூர்வ மையங்களில் இருந்து நண்பர் அகிலனுக்கு தகவல் கிடைத்துள்ளது. நமது வழக்கறிஞர் மற்றும் மதுரையில் உள்ள துணை அட்வகேட் ஜெனரல் ஆகியோர் வழக்கு 9.2.15 அன்று வரும் என்றும், ஆதிதிராவிட நலத்துறையில் 10.2.15 அன்று வரும் என்றும் தகவல் அளித்துள்ளனர். அனால் இந்த இரு தேதிகளில் ஒரு தேதியில் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் அதில் அட்வகேட் ஜெனரல் ஆஜாரகுவார் என்றும் வழக்கு முடிந்துவிடும் என்றும் அகிலன் தகவல் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் சரியான தகவல் மற்றும் தேதியினை பெற்று பதிவிடுவதாகவும் கூறியுள்ளார். வழக்கு திங்கட்கிழமை பட்டியலில் இல்லையெனில் கவலை படவேணாம் அவசர வழக்காக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அடவகேட் ஜெனரல் ஆஜராகும் தேதி நமது வழக்கு நடைபெறும். மேற்கூறிய இரு நாட்களில் ஒன்றில் அவர் ஆஜராவது மட்டும் உறுதியான தகவல் எனவும் கூறியுள்ளனர். நல்லது நடக்கட்டும் என வேண்டுங்கள்.....மாலை தகுந்த விளக்கம் சரியான தகவலுடன் அகிலன் பதிவிடுவார்....

    ReplyDelete
    Replies
    1. Muniyappan sir
      bt second list vara vaippu irukka

      Delete
    2. Muniyappan sir
      bt second list vara vaippu irukka

      Delete
    3. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

      Delete
    4. அனைவருக்கும் வணக்கம்

      நமது வழக்கறிஞர் ADW , PIRAMILAI KALLAR நியமனம் தொடர்பான வழக்கு நாளை (09.02.14)வருவதாக முன்பு கூறி இருந்தார் ,

      ஆனால் நமது ஆதி திராவிட நலத்துறை முன்பிருந்தே கூறியது என்னவென்றால் 10.02.15 (செவ்வாய்கிழமை)அன்று மதுரை உயர் நீதி மன்ற கிளையில் நமது வழக்கு மற்றும் இன்னும் இரண்டு முக்கிய மான வழக்கு விசாரணைக்கு வருவதால் அன்று கட்டாயம் ADVACATE GENERAL ( அரசு தலைமை வழக்கறிஞர்) மதுரை செல்வதாக நமது ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் கூறியதாக நமக்கு செய்தி கிடைத்துள்ளது

      மேலும் நமது வழக்கறிஞரிடம் தற்போது பேசினேன் அவரும் வழக்கு 10.02.15 செவ்வாய்கிழமை தான் வருகிறது கட்டாயம் AG வரப்போவதாக மதுரையில் இருக்கும் AAG அவரிடம் கூறியதாக சொன்னார்

      பார்க்கலாம் இனி எல்லமே நல்லா தான் நடக்கும்

      வழக்கு முடிந்தால்TRB உடனே LIST விடுவார்கள் FEB 24 தேதிக்குள் அனைவரும் பணிக்கு சென்று விடலாம்


      கட்டாயம் 5 % தளர்வு ADW SCHOOL நியமனத்தில் உண்டு

      அதுபோல் SCA உள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவார்கள் அவர்கள் ஐயப்பட வேண்டியதில்லை

      பின் குறிப்பு
      கட்டாயம் இந்த மாதம் நான் விரும்பும் பள்ளிக்கு வேலைக்கு சென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஜனவரி மாதத்துடன் நான் மிகவும் விரும்பி பணி செய்த எனது வேலையை விட்டு விட்டேன்

      Delete
    5. please computer sciencekku vellai tharuvarkala illaya please yethavathu vali irunthal kettu sollungalen akilan sir

      Delete
    6. Nanbare case detail Irunthal Pathividavum.......

      Delete
  2. 82 பாஸ் மார்க்கா ? இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை .பாஸ் இல்லை .அப்படி பணி வழங்கியவர்களும் வெளியேறும் நாளும் வரும்

      Delete
    2. உங்கள் கனவு வெறும் கனவாகவே இருக்கும்

      Delete
    3. ஒரு நாளும் உங்கள் ஆசை நிறைவேறாது ஆல்வின் சர் எங்களுக்கும் நீதிமன்றங்கள் தெரியும் வேலை கேட்க உரிமை உள்ளது யாருடய வேலையையும் பரிக்க கூற உங்களுக்கு உரிமை கிடையாது

      Delete
    4. Yan sir supreme court ungaluku matum sonthama.

      Delete
    5. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை ஊழல் செய்து வேலை பெறவில்லுயே ஊழல் செய்து வேலை பெற்றவர்களே பணி தொடர்கின்றனர் நாங்கள் தவறு செய்ய வில்லையே பிறகு எங்களுக்கு ஏன் தண்டனை

      Delete
    6. Hello jeffer ali supreme court யாருக்கும் சொந்தம் இல்ல. Relaxation candidates என்ன தப்பு பண்ணினோம்

      Delete
    7. Nanum relaxationla than valaiku vanduitukan anitha madam

      Delete
    8. Govt koduthuchu nanga vanthom.job thana thedi varum pothu yarum vananu sola mattanga

      Delete
  3. No appointment have been given for ADW/MBC W school so far even after selected list was published. Also more number of eligible teachers are available in surplus since 2013 and they are suffering from 2013 for unemployment due to weightage and retrospective effect of mark relaxation.
    No amicable solutions are obtained.
    So what is the need of further TET?

    In this Regards articles were published in pallikoodam website.

    ReplyDelete
    Replies
    1. Pass panna neenga 70000 per irukkinga aana padichavanga 800000 per irukkanga avanga velai ketka venama so tet venum

      Delete
    2. If TET is held at this stage
      nothing will happen except.number of passing person increase from 70 thousands to one lacs or 1.5 lacs

      Delete
  4. முனி சார் ஆதி திராவிடர் இடைநிலை பட்டியலில் 5% தளர்வு உண்டா????

    ReplyDelete
  5. Replies
    1. Sir i am maghendiran from krishnagiri.. I want to know ur contact number to talk about tet teachers promotion related... 9750059540 this is my number pls give a miss call to dis number

      Delete
  6. Dear Admin as well as Dear friends

    சரிந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கையாலோ அல்லது ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாலோ, தகுதி தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது என்பதாக இதுவரை செய்தி வெளிவரவில்லை.

    செய்தி;
    ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
    By dn, சென்னை
    First Published : 03 December 2014 05:31 AM IST

    உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவடைந்ததும் அந்தத் தேர்வு தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
    அதேபோல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகையை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு மதிப்பெண் சலுகை ரத்து செய்யப்பட்டது.
    இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகப் பின்பற்றப்படும் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு முடிந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    http://www.dinamani.com/tamilnadu/2014/12/03/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/article2552907.ece

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete
  7. Alex sir how are you by antony sammy from dindigul district appointed as BT ASSISTANT IN THIRUVANNAMALAI DISTRICT through TET EXAM currently

    ReplyDelete
    Replies
    1. Good Mr Anthony Samy. I am fine, what about you??

      Delete
  8. அனைவருக்கும் வணக்கம்

    நமது வழக்கறிஞர் ADW , PIRAMILAI KALLAR நியமனம் தொடர்பான வழக்கு நாளை (09.02.14)வருவதாக முன்பு கூறி இருந்தார் ,

    ஆனால் நமது ஆதி திராவிட நலத்துறை முன்பிருந்தே கூறியது என்னவென்றால் 10.02.15 (செவ்வாய்கிழமை)அன்று மதுரை உயர் நீதி மன்ற கிளையில் நமது வழக்கு மற்றும் இன்னும் இரண்டு முக்கிய மான வழக்கு விசாரணைக்கு வருவதால் அன்று கட்டாயம் ADVACATE GENERAL ( அரசு தலைமை வழக்கறிஞர்) மதுரை செல்வதாக நமது ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் கூறியதாக நமக்கு செய்தி கிடைத்துள்ளது

    மேலும் நமது வழக்கறிஞரிடம் தற்போது பேசினேன் அவரும் வழக்கு 10.02.15 செவ்வாய்கிழமை தான் வருகிறது கட்டாயம் AG வரப்போவதாக மதுரையில் இருக்கும் AAG அவரிடம் கூறியதாக சொன்னார்

    பார்க்கலாம் இனி எல்லமே நல்லா தான் நடக்கும்

    வழக்கு முடிந்தால்TRB உடனே LIST விடுவார்கள் FEB 24 தேதிக்குள் அனைவரும் பணிக்கு சென்று விடலாம்


    கட்டாயம் 5 % தளர்வு ADW SCHOOL நியமனத்தில் உண்டு

    அதுபோல் SCA உள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவார்கள் அவர்கள் ஐயப்பட வேண்டியதில்லை

    பின் குறிப்பு
    கட்டாயம் இந்த மாதம் நான் விரும்பும் பள்ளிக்கு வேலைக்கு சென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஜனவரி மாதத்துடன் நான் மிகவும் விரும்பி பணி செய்த எனது வேலையை விட்டு விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. Kandippa ungalukum nallatha nadakum

      Delete
    2. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete
  9. Replies
    1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete
  10. TNTET 2016 தேர்வு உறுதியாக நடக்குமா ? Please reply friends

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி