10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நத்தம் அருகே வேலாயுதம்பட்டி அரசு பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர். 32 மாணவர்கள் 10 ம் வகுப்பு படிக்கின்றனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் நாச்சான், காத்தமுத்து மகன் கார்த்திக், காரைக்குண்டை சேர்ந்த கண்ணன் ஆகியோரை அரசு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களை ஆசிரியர்கள் தகாத வார்த்தையில் திட்டினர். இதை கண்டித்து பெற்றோருடன் மாணவர்கள் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினியிடம் மனு அளித்தனர். அவர்களிடம் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை விசாரித்தனர்.
மாணவர்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தொடர்ந்து எங்களை திட்டினர். அதற்கு பயந்து நாங்கள் பள்ளி செல்லவில்லை. தேர்வு எழுத அனுமதி கேட்டும் மறுத்துவிட்டனர். இதனால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டது, என்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:
அப்பள்ளியில் 2 மாணவர்கள் செப்டம்பரில் இருந்தும், ஒரு மாணவர் அக்டோபரில் இருந்தும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் தேர்வு எழுத முடியவில்லை. முன்கூட்டியே இம்மாணவர்கள் புகார் கொடுத்திருந்தால் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்திருக்கலாம். மற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கூறிய புகார் குறித்து விசாரிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி