கல்லூரிகள் பயன்படுத்தாத நிதி 10% வட்டியுடன் திரும்பவும் வசூலிக்கப்படும்: யு.ஜி.சி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

கல்லூரிகள் பயன்படுத்தாத நிதி 10% வட்டியுடன் திரும்பவும் வசூலிக்கப்படும்: யு.ஜி.சி..


“பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய நிதியை பயன்படுத்தாத கல்லுாரிகளிடம் இருந்து, அந்த தொகையை, 10% வட்டியுடன் திரும்ப வசூலிப்போம்” என, பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் தேவராஜ் கூறினார்.
கோவை மாவட்டம், துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ் பேசியதாவது:

ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கு அடித்தளம் அமைக்கும் சமூக விஞ்ஞானிகள். மாணவர்கள், ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.கல்லுாரியில் பெறும் பட்டங்களுக்கு ஏற்ற வகையில், உங்கள் தகுதிகளை நீங்கள் வளர்த்துக்கொள்ளாவிட்டால், அவை வெறும் காகிதங்கள் ஆகிவிடும்.கல்லுாரிகள் என்பது, வேலை தேடித்தரும் நிறுவனங்கள் அல்ல. கல்லுாரியில் இருந்து வெளியே வந்தவுடன் உங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக்கொண்டு, வேலை தேடிக்கொள்ள வேண்டும்.மாணவர்களின் மனதில் நேர்மறையான சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்களின் மன ஓட்டத்தை தெரிந்து, அதற்கேற்ப நீங்கள் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தேவராஜ் பேசினார்.நிருபர்களிடம் பேசிய அவர், “பல்கலை மானியக் குழு, இந்தியா முழுவதும் சிறந்த 15 கல்லுாரிகளை தேர்வுசெய்து அவர்களுக்கு, 150 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.சில கல்லுாரிகள், இந்த நிதியை பயன்படுத்தாமல் வைத்துள்ளன. தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால், அத்தொகையை யு.ஜி.சி., 10 சதவீத வட்டியுடன் திரும்ப வசூலிக்கும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி