கணித திறனை வெளிப்படுத்தும் 13 வயது தேனி மாணவர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2015

கணித திறனை வெளிப்படுத்தும் 13 வயது தேனி மாணவர்


தேனியை சேர்ந்த பள்ளி மாணவன் தட்சணகுமார் தனது கணித திறனை வெளிப்படுத்தி மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்றுவருகிறார்.
தற்போது எட்டு இலக்கஎண்களுக்கு கணித தீர்வு காணும் இவர், விரைவில் 13 இலக்க எண்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் டி.தட்சணகுமார்,13. இவர், இரண்டு எட்டு இலக்க எண்களுக்கான பெருக்கல் விடையை உடனடியாக பதிலளிக்கிறார். 2100 ம் ஆண்டிற்குள் எந்த தேதியை சொன்னாலும் அதற்குரிய கிழமையை சொல்கிறார். இரண்டுஇலக்கஎண்களை மூன்று முறை பெருக்குவதில் கிடைக்கும் விடையை கூறி, அதன் மூல பெருக்கல் எண்ணை கேட்டால் உடனே பதிலளிக்கிறார். இதேபோல் பல்வேறு கணித திறன்களுக்கு உடனடியாக பதிலளிக்கிறார். பள்ளி, கல்லுாரிகளில் நடந்த போட்டிகளில் பதக்கங்கள், சான்றுகளை பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் போட்டி நடந்தது.

பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தட்சணகுமார் கணிததிறனுக்கான போட்டியில் கல்லுாரி மாணவர்களை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றார்.மாணவர் டி.தட்சணகுமார் கூறியதாவது: சிறு வயது முதல் என் தாத்தா எனக்கு கணித திறனை கற்றுத்தந்தார். என் சொந்த பார்முலாவை உருவாக்கி வேகமாக கணக்குபோட பழகி வருகிறேன். தற்போது எட்டு இலக்க எண்களுக்கு கணித தீர்வு காணும் நான், விரைவில் 13 இலக்க எண்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கணிதமேதை ராமானுஜத்தின் தீர்க்க முடியாத கணக்கு பார்முலாக்களுக்கு தீர்வு காண்பதே என் லட்சியம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி