'பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டிய, முதல் இரண்டு சீருடைத் துணிகள், மார்ச் 15ம் தேதிக்குள், சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் கோகுல இந்திரா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, நான்கு சீருடை வழங்கப்படுகிறது.
இதற்கு தேவையான துணிகளை, கைத்தறித் துறை நிறுவனம் தயார் செய்கிறது. வரும் கல்வி ஆண்டு, இலவச சீருடை வழங்குவது தொடர்பாக, கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில், ஆலோசனை கூட்டம்நடந்தது. முதல் கட்டமாக, இரண்டு சீருடைக்கான துணிகளை, மார்ச் 15ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும். எனவே, துறை அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தேவையான துணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் அனுப்பி வைக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி