ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆதார் அட்டைஇந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை, இன்றியமையாத ஒன்றாகி விட்டது.
இதன் காரணமாக ஆதார் அட்டை பெறாதவர்கள், அவற்றை பதிவு செய்து, பெறுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதற்கிடையே சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை தகவல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.வாக்காளர் அட்டையில் இணைக்க...இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதன் காரணமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருந்துகொண்டு, அடையாள அட்டை பெற்றிருந்தால், அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் கருதி, அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கள்ள ஓட்டு இருக்காது
தேர்தல் கமிஷனின் இந்த திட்டப்படி, ஆதார் அட்டை எண், செல்போன் எண் போன்ற தகவல்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கப்படும். இதற்கான பணி, சிறப்பு முகாம்கள் வாயிலாக நடைபெறுகிறபோது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்யவும் முடியும். குறிப்பாக பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதியில் தவறு போன்றவற்றை திருத்திக்கொள்ள முடியும்.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைத்து விட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் (2019–ம் ஆண்டு) வாக்காளர்கள் ஓட்டு போட வருகிறபோது, அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு அறவே இல்லாமல்போய் விடும்.
ஆகஸ்டு 15 இலக்கு
வாக்காளர் அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்கும் பணியை ஆகஸ்டு 15–ந்தேதிக்குள் செய்து முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு, இது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா, உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி