போபால்:ம.பி., தலைநகர் போபா லில், உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ம.பி., யில், உலக யோகா தினமான, ஜூன் 21ம் தேதியன்று, பள்ளி மாணவ, மாணவியரை கொண்டு, பிரமாண்ட அளவில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
பிரதேச இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், இதுகுறித்து, மாநில பொதுக் கல்வி துறை அதிகாரி அகர்வால் உத்தரவிட்டு உள்ளார்.தலைநகர் போபாலில் உள்ள, ஜம்பூரி மைதானத்தில், பிரமாண்டயோகா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 7ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும், 1 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.இவர்கள், ஜூன் 16 முதல் 20ம் தேதி வரை, சிறப்பு யோகா பயிற்சி யாளர் உதவியுடன், யோகா பயிற்சிகளை மேற்கொள்வர்.இதற்கான ஏற்பாடு களை, அனைத்து மாவட்ட ஆட்சிரியர்கள்செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி