2,600 புது டாக்டர் நியமன கலந்தாய்வு துவக்கம்: மூன்று மாத காத்திருப்புக்கு விடியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2015

2,600 புது டாக்டர் நியமன கலந்தாய்வு துவக்கம்: மூன்று மாத காத்திருப்புக்கு விடியல்

அரசு பணிக்கு தேர்வாகி, மூன்று மாதங்களாக காத்திருந்த, 2,600 புதிய டாக்டர்களுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது. அரசு பணியில் சேரும் கலந்தாய்வு துவங்கி உள்ளது. இம்மாத இறுதிக்குள், அவர்கள் அரசு பணியில் சேர்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, தேவைக்கேற்ப, 2,176 உதவி டாக்டர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், போட்டித் தேர்வு நடத்தி, டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, 'வாக் - இன் - இன்டர்வியூ' முறையில், எம்.டி., - எம்.எஸ்., படித்த சிறப்பு டாக்டர்கள், 433 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு நிலைகளிலும், 2,600க்கும் மேலான டாக்டர்கள் தேர்வாகி, மூன்று மாதங்கள் ஆகியும், பணி நியமனம் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது. ஏற்கனவே பணியில் உள்ள, அரசு டாக்டர்கள் இடமாறிக் கொள்ள நடந்த கலந்தாய்வு முடிந்த நிலையில், புதிய டாக்டர்கள் நியமன கலந்தாய்வு துவங்கி உள்ளது. சிறப்பு நிலை டாக்டர் கலந்தாய்வு, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், உதவி டாக்டர் கலந்தாய்வு, சென்னை, எழும்பூரில் உள்ள பொது சுகாதாரத் துறை பயிற்சி மையத்திலும் துவங்கி உள்ளன. தினமும், 250 பேர் பங்கேற்று வருகின்றனர். பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், ''கலந்தாய்வில், காலியிட பட்டியலை பார்த்து, விருப்பமுள்ள இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்; உடனடியாக பணி ஆணை தரப்படுகிறது. கலந்தாய்வு சில நாட்களில் முடிந்துவிடும். பணியில் சேர, 30 நாட்கள் அவகாசம் இருந்தாலும், இம்மாத இறுதிக்குள் பணியில் சேர்ந்து விடுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி