வணிகவியல் தேர்வு 'ஈசி': பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2015

வணிகவியல் தேர்வு 'ஈசி': பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 வணிகவியல் தேர்வில், முதல் மூன்று பாடங்களில் இருந்து, 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றன. இதனால், எளிதில் தேர்ச்சி பெறலாம் என, மாணவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நேற்று, பிளஸ் 2 வணிகவியல், ஹோம் சயின்ஸ் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது. வணிகவியலில், ஒரு மதிப்பெண், 40; நான்கு மதிப்பெண், 10; எட்டு மதிப்பெண், ஐந்து; 20 மதிப்பெண் வினாக்கள், நான்கு இடம் பெற்றன. இதில், முதல் மூன்று பாடங்களான அமைப்பு, பணி வணிகம் மற்றும் கூட்டாண்மையில் இருந்து, 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றன. மேலும், பாடத் திட்டத்தில் இருந்தும், பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் இடம் பெற்றன. 'புளூ பிரின்ட்'டில் இடம் பெற்ற பெரும்பாலான வினாக்கள், தேர்வில் வந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். வணிகவியல் தேர்வில், 46 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். இதில், 17 பேர் தனித் தேர்வர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி