சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்


மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ,மாணவியர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த ஆண்டு, நாளை ஒரேநாளில் துவங்குகிறது. 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ம் தேதியும்; பிளஸ் 2வுக்கு, ஏப்ரல் 20ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன.

இந்த ஆண்டு, 10ம்வகுப்பில், 8,17,941மாணவர்; 5,55,912 மாணவியர் என மொத்தம், 13,73,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2வில், 6,07,383 மாணவர்; 4,32,985 மாணவியர் என மொத்தம், 10,40,368 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், 1 சதவீத மாணவர்கள் அதிகமாகதேர்வெழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி