முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும் மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கருத்தும் காட்சிப்படுத்துதலும் என்ற பொருளில் பத்து நாள் பயிலரங்கத்தை நடத்தியது. பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல்துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: முதுகலைத் தமிழில் முதல் ஐந்து இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கவும் செம்மொழி மத்திய நிறுவனம் முயற்சிக்கும்.

அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் செயல்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பழந்தமிழ் இலக்கியங்களில் சிறப்புகளையும், பெருமைகளையும் வெளிக்கொணரும் வகையில் பயிலரங்கினை அமைத்து, பயிலரங்க கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுவது அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் சாதனையாகும் என முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜே.வசந்தகுமார் பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார். அவர் பேசியது: பழமையும், பெருமையும் கொண்ட தமிழியல்துறை பல்வேறு ஆக்கப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ் வளர்ச்சிபணிகளில் அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறைக்கு என்று தனித்த இடம் உண்டு.

காலத்திற்கேற்ப தமிழியல்துறையும், தமிழ் ஆய்வுகளும்நவீனப்படுத்தப்பட வேண்டும்.இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பதிவாளர் ஜே.வசந்தகுமார் தெரிவித்தார். பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.ராஜா நன்றி கூறினார். விழாவில்முன்னாள் பேராசிரியர் காமாட்சிநாதன், தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்ப்பிரிவு தலைவர் முனைவர் ந.வெங்கடேசன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

1 comment:

  1. "எனது நெஞ்சம் நிறைந்த அன்பு சகாக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்..! இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் இன்று நம்பத்தகுந்த நல்லசெய்தி கிடைத்துள்ளது. அதாவது இன்று காலை எழிலகம் வளாகத்தில் தமிழக அரசின் தலைமை ஆலோசகர் திருமதி. சாந்தா ஷீலா நாயர் IAS முன்னிலையில் இந்தாண்டிற்க்கான பழங்குடியினர் நலன் சார்ந்த திட்ட ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் திருமதி. கண்ணகி பாக்கியநாதன் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்ட ஆலோசனை கூட்டத்தில் "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்"மானமிகு. அய்யா. கிறிஸ்துதாஸ் காந்தி IAS உட்பட மேலும் பல அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டு நாம் கடந்து வந்த போராட்ட பாதை, தற்போதுவரை தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் எடுத்து கூறி எங்களுக்கு உரிமையை பெற்றுத் தாருங்கள் என்று விவாதித்தோம். அதற்கு நமது நலத்துறையின் செயலாளர் அவர்கள் வருகின்ற புதன்கிழமை (11.03.15) அன்று உங்களுக்கு உரிய வழக்கு முடிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்..! எனவே நமது உரிமை விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை..! அதுவரை காத்திருப்போம்..! என்றென்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி